Thursday, September 02, 2010

திருநெறிய தமிழ்த் திருக்குட நன்னீ ராட்டுப் பெருவிழா

அண்டம் கடந்த பொருள் அளவில்லாதோர் ஆனந்த வெள்ளப் பொருள் ,பண்டும் ,இன்றும் ,என்றும் உள்ள பொருள்
ஓர் நாமம் ,ஓர் உருவம் ஒன்றும் இல்லாத அப்பரம்பொருள் ஆன்மாக்களைக் கடைத்தேற்ற வேண்டி பல்வேறு
திருநாமங்களும் ,வடிவங்களும் தாங்கி ஆங்காங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் புனித இடங்களே திருக் கோயில்களாகும் .
திருக் கோயில் வழிபாடு நம்மை நன்னெறிப் படுத்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும்
வழிமுறை ஆகும்.

கமுகோடு தென்னை, கழனிஎங்கும் செந்நெல், வாழையோடு கரும்பு ,வற்றாத நொய்யல்நதி
என்று வளம் கொழிக்கும் மருதநிலம் கொண்ட எங்கள் சந்தேகவுண்டன் பாளையம் கிராமத்தில்
எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கும்,
அருள்மிகு விநாயகர் ,அருள்மிகு முருகப்பெருமான் உடன் அருள்மிகு மாரியம்மன் .
ஆகிய திருக்கோயில்களுக்கு
திருக்கைலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதினம் கயிலை குருமணி சீர்வளர்சீர்
சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
அவர்களின் அருளாசியோடு
பழனியாதீனம் தவத்திருசாது சண்முக அடிகளார் அவர்கள் தலைமையில்
பேருராதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் முன்னிலையில்
பேருராதீனம் சிவசாந்தலிங்கர் அருட்பணிமன்ற அன்பர்களால்
சீரும் சிறப்புடனும் கடந்த 22.08.2010 அன்று திருநெறிய தமிழ்த் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா
நடந்ததின் அற்புத காட்சிகளை நீங்களும் காணுங்கள்


வேள்விகுண்டத்தில் இருந்து புனித நீர் கலச புறப்பாடு








கோபுர தரிசனத்திற்க்கே கோடி புண்ணியம் அளித்த ஆண்டவன் கோபுர கலசத்தின் குடமுழுக்கை காணும் உங்களுக்கு கோடானு கோடி பலன்களை அருளட்டும்!!

திருக்குட நன்னீராட்டு பதின்மங்களக் காட்சி




கோயில் திருவிழாக்கள் என்றாலே வண்ணவிளக்குகளுக்கும், வானவேடிக்கைகளுக்கும் குறைவிருக்காது!!!




நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க