இச் செகத்தினை அழித்திடுவோம்
நீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா!!
காணி நிலம் வேண்டும்
பராசக்தி
காணி நிலம் வேண்டும்
என இயற்கையையும் அது சார்ந்த வேளாண் வாழ்வையும் நேசித்தும்
இன்றைய இளைஞர்களின் கவனம்
உழவின் பக்கம் இல்லை.அவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறாது ,தானே
உழைத்துக் காட்டவே! தன் அன்னையிடம் காணி நிலம் கேட்டுள்ளார்.
அதற்குள் அன்னை தன் மகனை எடுத்துக்கொளல் என்ன நியாயமோ ?
இது என் பார்வை....!!
ஒரு நகர இளைஞனாக,நாம் ஒரு சில காத தூரம் நகரத்தை விட்டு
வெளியேறிச் செல்லும் போது காணும் வயல் வெளிகளும்,பசுமைகளும்,
சோலைகளும் மரங்களும்.. மனதை எவ்வளவு மகிழ்விக்கிறது .
இதையே நாம் உண்டாக்கி பார்த்தால் அந்த மகிழ்ச்சியை என்னவென்று
கூறுவது?!!
அந்த மகிழ்வை உணர்ந்தேன்!!! உணர்ந்ததால் உணர்ந்ததை கூறுகிறேன்
நகரத்தின் நடுவே அன்னையின் ஆலயத்திற்கு அருகில் என் இல்லம்.
நூறு சதவித நகர வாழ்க்கை. நாங்கள் விளையாடிய விளையாட்டு மைதானமோ,
அங்கையர்க்கன்னியின் ஆடி வீதி. நான் பார்த்த ஆறு ,குளம் ,கடல் , அனைத்தும்
அங்குள்ள பொற்றமரைக்குளமே, பள்ளி விடுமுறை நாட்களில் என் அம்மானின்
கிராமத்திற்கு செல்லுகையில் அங்கு நான் காணும் காட்சிகளும், மனதை தீண்டும் ஆனந்தத்திற்கும், எல்லையில்லை.
நெஞ்சமது நினைப்பதெல்லாம் ,எல்லோரும் ஏர் காலை தூக்கிக்கொண்டு
உழச் செல்லவேண்டுமென்ற நடை முறைக்கு ஒவ்வாத கருத்தையல்ல.
நகர வாழ்வின் மீது மோகம் கொண்டு கிராமமெனும் சொர்க்கம் தனை
இழந்து , வாழ்வதை தவிர்த்து , இயற்க்கை சார் வாழ்க்கை தரும் நன்மைகளும்,
அது தடுக்கும் தீமைகளையும் புலப்படுத்துவதாகும்.
வாழ்வியலை நகரத்தில் அமைத்துக்கொள்வதை நிறுத்தி ,வேளாண் முறையில்
பண்ணை வீடுகளாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் .இன்றைய விஞ்ஞான
உலகில் தூரம் ஒரு பெரிய பொருட்டல்ல ஏனெனில் போக்குவரத்து முன்னேற்றங்களால்
உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது.