Monday, March 15, 2010

கடவுள் இருக்கிறார்!!! ஆனா!!!

சுஜாதா அல்ல நான்!!
சு.மருதா தான் ,அவருடைய ஆற்றல் என்னிடம் இல்லை
அதனால் அவரைப்போல என்னால் விளக்கவும் இயலாது
எதோ என்னால் முடிந்தவரை..,
லாங்லாங் எகோ...........
அப்படி எல்லாம் இல்ல, சும்மா இப்போ இருபதுவருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரி மாணவனின் ஆய்வில் உலகம் . இங்க ஆய்வதற்கு காரணம் அப்போ அவர் இயற்பியல் மாணவர் அதனால அவர் ஆராய்ந்திருக்கிறார். அப்ப அவர் சொன்னது
92534235.jpg

இதன் தொடர்ச்சி

54754399.jpg

அந்த நாட்குறிப்பேட்டில் அவர் எழுதியதின் விபரம்

எனது ஆய்வில் உலகம்
நான் ஆன்மீகத்தை ஆதரிப்பவனும் அல்ல அதற்காக நாத்தீகத்தின் கொள்கைகளை கொண்டாடுபவனும் அல்ல. இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் , இதை இறைவன் தான் படைத்தான் என்று வைத்துக்கொண்டால், ஒரு மூலம் இல்லாமல் எந்தஒரு பொருளும் உருவாகாது, உருவாக முடியாது. அப்படியிருக்கையில் உலகின் மூலம் கடவுள் என்றால் கடவுளின் மூலம் என்ன? ஞானி, யோகி,சான்றோர் யாவரும் கடவுளையும்,மனிதன்வாழ்க்கைநெறிமுறையைக் கூறியிருந்தாலும்
இறைவன் தோற்றத்தை, உருவானதை கூறவில்லை.
எனவே என்னை கேட்டால் இறைவன் இருந்தால்,அவனுக்கு
மூலம் வேண்டும். இல்லை,! இல்லையென்றால் உலகின் மூலம் வேண்டும்.
தீர்க்க முடியாத கேள்வி. எழுதபடாத தீர்ப்பு.
ராமகிருஷ்ணரின் நெறிமுறைகளின் படி பார்த்தால் அறிவுபூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்படும் உணர்ச்சிகளே கடவுள். என்றால் அறிவுபூர்வமான ஆன்மிகம் அபூர்வமானது. இன்றைய ஆன்மிகம் கோவிலின் எல்லையில் பகவத்கீதையின் பக்கங்களையும் திருவாசகத்தின் முனகல்களையும் வீசிவிட்டு வீடு வந்தால் வாழ வழி பார்க்கும் கூட்டம் தான் இன்றைய ஆன்மீகத்தை வழிநடத்தி செல்கிறது. பொதுவாக பார்த்தால் இன்றைய ஆன்மிகம் கவர்ச்சிக்குட்பட்டதாக ஆகிவிட்டது. தர்மம், ஈகை, நல்லெண்ணம், நல்லொழுக்கம் இவை யாவும் இருந்தால் தான் கோவிலின் உள்ளே நுழைய முடியும் என்றால் ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட தேவையில்லை.
ஏனெனில் செல்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். என்னை பொறுத்தவரையில் இறைவன் இவன் என தெரியும் வரை இறைவன் என எதையும் வணங்க மாட்டேன்.என்னை பொறுத்தவரையில் எனக்கு நானே நல்லவன் என நான் நினைப்பதால்நான் இறைவனை உணர முடியும் என நம்புகிறேன். அதுவரையில், இல்லை, ஏன் என்
வாழ்நாள் முழுவதும் என் தாய் தந்தை கடவுளாக இருப்பார்கள்.
குழம்பிய சிந்தை, அறியாத வயது, அனுபவம் இல்லாதகாலம் இதில் நான் ஏதோ பெரிய சான்றோன் போல் எழுதிய இதை படித்தவர் மன்னிக்கவும்.


இருபது வருடங்களுக்கு முன்னால் மிக துணிவுடன் இப்படி எழுதிய அந்த இளைஞன் இன்று இருப்பதோ நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று. அதில் தவறேதுமில்லை. ஏனெனில் அவன் சொல்லிய படி இடைப்பட்ட இந்த இருபதாண்டிற்குள் இறைவனை அவன் எங்காவது அறிந்தோ,தெரிந்தோ,உணர்ந்தோ இருக்கவேண்டும். அது எங்கு எப்போது எப்படி என்று அன்றைய கல்லூரி மாணவனான நான் இன்று சிந்தித்ததின் விளைவு இப் பதிவு.

கடவுள் என்கிற விசயமே மனிதன் தனது தன்னம்பிக்கையை இழக்கும் போது ஏற்படுகின்ற உணர்வு,அல்லது தேவை இது நாத்திகர்களின் கருத்து! இந்த நாத்திக கருத்தின் வாலைப்பிடித்துக் கொண்டே நகருவோம், மனிதன் தன் தன்னம்பிக்கையை இழப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முதுமை, பொருளாதார தடுமாற்றம்,இயலாமை. இவற்றுள் அடங்கும்.இதில் இளமையில் ஏற்படும் இயலாமைகள் நமக்கே தெரிவதில்லை அதை நாம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சுமைகள்(கடமை,பொறுப்புகள்,) ஏற்றபட்ட இதயங்களே இறைநம்பிக்கையை முதலில் ஏற்க விழைகிறது. இதில் பொருளாதார தடுமாற்றத்தினால் ஏற்படுகின்ற இயலாமையை மூர்க்கத்தனமாக எதிர்த்தவன்
நான் காரணம் என் தன்னம்பிக்கை மேல் எனக்கு இருந்த அதீத நம்பிக்கை. இதிலிருந்து நாத்திக கருத்தான மனிதன் தன், தன்னம்பிக்கையை இழக்கும் போது ஏற்படுகின்ற தேவை,அல்லது உணர்வு தான் கடவுள் என்ற வாதத்தை பொய்யாக்கமுடிந்த என்னால் மூன்றாவது காரணமான இயலாமையை வெல்ல இயலவில்லை. இந்த இயலாமை தான் இறைவனை உணர வைத்தது.எப்படிஎனில் நாட்குறிப்பேட்டில் கடவுளை நான் உணர முடியும் என எழுதியதின் விளைவோ என்னவோ? அனைத்திலும் தடங்கல்கள்,எத்திசை நோக்கினும் தடைக்கற்கள். நம்மை நாமே, நாம் செயல்பட முடியாத ஜடமென நினைக்க வைத்த சூழல்கள். அறிவும் ஆற்றலும் தேவைக்கேற்ப இருந்தும் இயலாமை எனும் இருள் எமை விட்டு விலகாதிருந்த நேரம்,தாய் அவளின் தாய்மை ஒரு தவமாய் தவத்தில் அவள் பெற்ற வரமாய் நாம்!! பெற்ற வரத்தை
பேணிக்காக்க தள்ளாமையிலும் அவள் எடுத்த முயற்சிகள்.அந்த தாயும் அதனுடன் பெற்ற அனுபவமும் கடவுளாய் எம்விழியில்! பிரிந்துவிட்ட நண்பனொருவன் இனியும் காழ்புணர்வு காட்டுதல் இழிவென்று கருதி என் இயலாமை எனும் இருள் விலக்கும் ஆதவனாய் வந்த நண்பனும் அவனது நட்பும்,விட்டுக்கொடுக்க விழைந்த எண்ணமும் , எண்ணத்தை ஏற்படுத்திய மனமும், கடவுளாய் என் விழிகளில்! பாகத்தை சரியாக
பிரித்தாலும் பாசத்தில் விட்டுக்கொடுக்காத பங்காளிகளும், உறவுகளும் கூட என் விழியில் கடவுள்தான்! ஏனெனில் அனுபவமெனும் பேராற்றலை நாம் பெற அவர்களுடைய செயலும் எண்ணங்களுமே நமக்கு களமாகும்.அனுபவங்களை ஏற்படுத்தி தரும் ஆசான்களாய் உள்ள உறவுகளும் உண்மையில் கடவுள் தான்!! போட்டி, பொறாமை, இன்னல்,இது போன்ற சூழல்களில் வாழப் பழகித்தரும் இவர்கள் இல்லாவிட்டால் இன்பத்தை மட்டுமே பருகி இன்பமும் திகட்டி விடும் நிலைக்கு தள்ளப்படுவோம், ஏனெனில் நாம் மானுடம் தானே மகாத்மா அல்லவே!!!

இயலாமை!!! முயற்சியே செய்யாமல் அல்ல முயன்றும் முடியாமல் நாமே நம்மை உயிரில்லா ஜடமென நினைக்கும் ஒரு நிலை ஏற்பட்டு நின்ற எல்லா செயலும் நாம் எதை எவ்வாறு எப்படி செய்யவேண்டும் என நினைத்தோமோ? அது அதன்படியே நம்முடைய கடின உழைப்பில்லாமல் நடந்தேறிய நிலை காணும் போது உம் நிலை? எம் நிலை ஏதோ ஒன்று நமை ஆள்கிறது அது ஏன் இதுவாக இருக்கக்கூடாது. ஐயமில்லை அது இதுதான்!! அது அவ்வாறு நம்மை ஏதும் இயங்க முடியா நிலைக்கு உட்படுத்தியதின் காரணம் நாம் அளவிட இயலா அனுபவத்தை பெற்று அதுவாகத்தான்!!! இங்கு அது இது எல்லாம் எது என்னும் உங்களுடைய ஆவல் எதுவாக இருப்பினும், என் விழியில், உன் உள் கட , உள் கட, உள் கட, உள் கட, எனும் கடவுளாய்!!! உழைத்து களைத்து இளைப்பாற நினைப்பவர்களுக்கு இனிய சுகந்தரும் இயற்கையும் எம்விழியில் கடவுளே! யாரென்றே அறியாத எவ்வுயிரும் துன்பப்படுகையில் மனம் பதறுகிற எந்த ஒரு இதயமும் அங்கிருந்து வெளிப்படும் கருணையும் ஏன் கடவுளாகக் கூடாது?






தன்னம்பிக்கை, இயலாமை,கருணை,முதுமை இவையெல்லாம் தவிர்த்து மனிதன் தன்னையறிதல் ஒரு மெய்ஞ்ஞானத் தெளிவு. நாம் முதலில் நம்மை அறிதல் வேண்டும்.








தன்னை அறிந்தவனுக்கு ஆசை எனும் தாகம் அறவே இருக்காது! உண்மை, அதன் மாற்றுப்பெயர் அசிங்கம்!! அதை அறிந்தவர்கள் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் அதை அறியமுடியும் மிக எளிது அனைவரும் அவரவர் மனதில் இது நாள் வரை நினைத்துள்ள
அனைத்து நினைவுகளையும்,எண்ணங்களையும் சொல்வார்களேயானால்!!-------------------------சங்கடம் தான்! எந்த தனிமனித ஆற்றல் தன் இலக்கை அடைகிறதோ அந்த மானுட மனதில் இந்தஅசிங்கமான உண்மை இருந்திருக்காது இது உண்மை!! இந்த மனசுன்னு ஒரு உறுப்பு நம்ம உடம்புக்குள்ள இருக்குன்னு சொல்லுகிற அத்துணை பேருக்கும் அது எங்கே இருக்குன்னு கேட்டா? இருக்கு, இருக்கு.....ஆனா! இல்ல!!! இல்ல......, இல்ல.., ஆனா இருக்கு! எல்லாரும் S.J.சூர்யா தான். இருக்கு அந்த மனம் என்கிற மாயை மானிட உடம்பெல்லாம், உணர்வெல்லாம் நிறைந்திருக்கிறது. அன்பு, கருணை, ஏழ்மை கண்டிரங்குதல், இயலாதவர்க்குதவுதல், பகைவர்க்கும் அருளுதல், போன்ற குணம் கொண்ட எந்த ஆன்மாவுக்குள்ளும் ஆண்டவன் இருப்பான்அது விளங்குகலானாலும்,மனிதர்கலானாலும்,சரி
மனசு என்கிற மாயை எல்லோரிடத்திலும் தன் சித்து விளையாட்டை காட்டும் அதற்கு மயங்காது மானிட மகத்துவத்தை உணர்வோம்.இதுக்கு மேல வேண்டாம். சிம்பிள சொன்ன நான் டைரி எழுதுணப்ப அவர(கடவுள்) தெரியல,அவர பத்தின பயம் இல்ல,ஆனா இப்போ இருக்கு. சோ, இந்த இருபது வருஷ கேப்ல அவரு எங்கயோ நம்ம ஏரியாக்குள்ள வந்துட்டு போயிருக்கார். இது கன்பாம்!!! ஆனா அது அனுபவமா? ஆண்டவனா? இயலாமையா? மரபுசார்மடைமையா? உங்கள் சாய்ஸ்!?
ஒரு இருக்கை எனக்கு/நமக்கு, மற்றது?