நண்பர்கள் நாலு பேர் பேசிக்கொண்டிருந்தோம்....
ஒரு நாள் மாலைபொழுதினில்....மதுவின் பிடியிலும் கூட...
நிஜம் தான் புனைவல்ல....இது...!!!
நண்பர்களில் ஒருவர் ராமாவதாரத்தில் இருந்து
கிருஷ்ணாவதாரத்திற்கு மாறிவிட்டார் சமிபகாலமாய்....
என்ன புரியலையா...?
புரியாதவர்க்கு புரிய... முருகனும் ....ஏன்..அவன் அப்பனும் தான்.....!!!
செட்டப்பு வச்சுகிட்ட மாறி இவரும் வச்சுக்கிட்டார்......விஷயம் இவ்வளவ்வு தான்..!!!
நண்பேன்னா..!!! நண்பேன்,,,தவறா போகும் போது...கண்டிச்சு திருத்துனா தானே...
நல்ல நண்பேன்ன்னு ஊரு சொல்லும்.....!! அதற்காக அவரை எல்லோரும்
இடித்துரைத்து ...திருந்தச் சொன்னோம் .....இப்பத் தாங்க அந்த கேள்வியே வந்துச்சு......
"வாய்ப்பு கிடைகாதனால நீங்கல்லாம் யோக்கியனுகளா ..? இல்ல வாய்ப்பு கிடைச்சாலும் நீங்கல்லாம் யோக்கியனுகளா..?" இது தாங்க அந்த கேள்வி
கேட்ட மவராசே...அவன்பாட்டுக்கு மப்புல....கேட்டுட்டான்...ஆனா...!!
இந்த கேள்வி பலமுறை என் மனக்கண்ணில் அல்ல காதில்
மீண்டும் மீண்டும் ஒலித்தது..உண்மை புரிந்தது
கோயிலின் குருக்கள் குடிக்காமலிருப்பது பெரிதல்ல...!
சாராயக்கடையில் பணிபுரியும் குப்பனும்,சுப்பனும் குடிக்காததே பெரிதென்று...!!
தவறிழைக்கும் வாய்ப்பே வாய்க்கப் பெறாத ஒருவன் என்றேனும் வாய்ப்பு கிடைக்கும் போது
தடுமாற்றம் ஏறபடின்...இதுகாறும் தவறிளைக்காது இருந்து பயனில்லை....தவறிழைக்கும் வாய்ப்புகளுக்கு
மத்தியில் தடுமாறாமல் வாழ்பவனே மனிதன் எனும் உண்மையை அந்த கேள்வி எனக்கு விடையாய் தந்தது...! .