Sunday, March 30, 2014

மதுரையல்ல...,மக்காள் இது மாமதுரை...!! (2)

 

 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்.
மதுரை இளங்கண்ணிக் கௌகிகனார்.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் உற்றனார்.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்.
மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார்.
மதுரை ஓலைக்கடையத்தூர் நல்வெள்ளையார்.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்.
மதுரைக் கண்டர தத்தனார்.
மதுரைக் கண்ணத்தனார்.
மதுரைக் கண்ணனார.
மதுரைக் கணக்காயனார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
மதுரைக் கதக்கண்ணனார்.
மதுரைக் கவுணியன் பூதத்தனார்.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்.
மதுரைக் காஞ்சிப் புலவர்.
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்.
மதுரைக் கூத்தனார்.
மதுரைக் கொல்லன்புல்லர்.
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்.
மதுரைச் சுள்ளம் போதனார்.
மதுரைத் தத்தங் கண்ணனார்.
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்.
மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்.
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.
மதுரைப் புல்லங் கண்ணனார்.
மதுரைப் பூவண்டல் நாகன் வேட்டனார்.
மதுரைப் பெருங் கொல்லனார்.
மதுரைப் பெருமருதனார்.
மதுரைப் பெருமருதிள நாகனார்.
மதுரைப் போத்தனார்.
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்.
மதுரை மருதனிள நாகனார்.
மதுரை வேளாசான்.
மதுரை வேளாதத்தர்.

யார் இவர்கள்...?


தலை,இடை,கடை, என முச்சங்களை வளர்த்து முத்தமிழையும்
காத்த சங்கப்புலவர்களே இவர்கள்.

மதுரை அல்லாத சேர, சோழ,பல்லவ நாட்டுப் புலவர்கள் பலர் இருப்பினும்
பாண்டி நாட்டு மாமதுரையைச் சேர்ந்த புலவர்கள் இவர்கள்,இவர்களின் தனிச்சிறப்பு உயிரினும் மேலான தம் மண்ணை தன் பெயருடனே இணைத்துக் கொண்டவர்கள் என்பதே..,
இவர்களனைவருடனும் ஈசனே
சங்கரனார் எனும் பெயரில் தெய்வப் புலவராய் இருந்து தமிழ் காத்தாராம் நமசிவாயன்,

Saturday, March 29, 2014

மதுரையல்ல மக்காள்...,இது மாமதுரை...!!





 

மதுரையல்ல மக்காள்..., இது மாமதுரை...!!

என்னோட மெரீனா பீச்...,
ஆமாங்க..., bro.,
என்னோட மெரீனா பீச்
என்னோட லார்ட்ஸ் கிரவுண்ட்(மேல ஆடிவீதி)
என்னோட கேம்பிரிட்ஜ்
என்னோட தாஜ்மஹால்
என்னோட லவ்வர்ஸ் பார்க்
என்னோட நான் ஏறிப்பார்த்த ஈபிள் டவர்
எல்லாமே...,
எனக்கு எங்க மீனாட்சி அம்மன் கோயில் தாங்க பாஸ்..,
இந்த மதுரைய சுத்துன இந்த பியூஸிபெலஸ் இன்று பிழைப்பிற்காய் எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும்...,உள்ளுக்குள் உயிராய் என் ஊரின் நினைவுகள்...,ஒவ்வொரு நாளும் மலரும் நினைவுகளாய் மலர்ந்து கொண்டுதானிருக்கிறது.யாராச்சும் ஒரு ஊரைக் காதலித்து பார்த்திருக்கிறீர்களா...? சகோ. ஆமா...சகோ
மதுரையில பிறந்த ஒவ்வொருத்தரும் மதுரைய காதலிக்கிறாங்க தெரியுமா...? இதுதான் காலப்போக்குல மறுவி மதுரையசுத்துன எந்த பீயூஸிபெலஸும்
(பீயூஸிபெலஸ்ன்னா மாவீரன் மகாஅலெக்ஸாண்டரின் குதிரைதான் எல்லாரும் "மதுரையச் சுத்துன கழுதை"ன்னு சொல்வாங்க நாம அப்படி நம்மளையே மரியாதை இல்லாம சொல்லக் கூடாதுல்ல அதனால தான் இந்த பீயூஸிபெலஸ் பில்டப்)
மதுரைய விட்டுவெளிய போகாதுன்னு சொல்றாங்க...,:-O

இருக்கட்டும் சகோ..., வாங்க எல்லாரும் மதுரைக்கு வருவோம்...,

மதுரை எனச் சொல்லும் முன் ஆதாராமாய் சில..,
500 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியப் பெருங்கிரகத்தில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவினால் வீசி ஏறிந்த சிறிய துகள் தான் இன்றைய அனைத்து உயிர்களும் தோன்றக் காரணமான பூமி இதில் உயிரினங்களின் உச்சமென கருதப்படும் (மனிதன்)நாம் தோன்ற பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
இது அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மையும் கூட..., ஆம்

குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என டார்வின் தனது கூற்றை
ஒரே வரியில் சொல்லிவிட்டாலும் உலகில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்து நாற்கால் உயிரினமான குரங்கினம் தோன்றிய பின்
இயற்கை தன் சோதனையை ஏறக்குறைய 299 இலட்சம் ஆண்டுகள் ஒரு நீண்ட நெடுஞ் சோதனையாக நடத்தி வெற்றிகண்டிருக்கிறது
குரங்கின் பரிணாம வளர்ச்சி உயிரின வரலாற்றின் உச்சம் மனிதனை உலகிற்கு பரிசளித்துள்ளது இயற்கை இந்த நீண்ட நெடிய சோதனையை நடத்தி மானுடத்தை உலகினுக்கு பரிசளித்த காலம் கி.மு 100000 என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாய் தோன்றிய மனித இனம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தோன்றவில்லையாம். உலகின் மூன்று முக்கிய பகுதிகளில் தான் தோன்றியதாம் அதில் ஒன்று தான் தமிழர் தாயகம் குமரிக் கண்டமாம்
இக்குமரிக்கண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் கரையில் தான் பழம் மதுரை அமைந்திருந்ததாம்

மதுரம் எனும் சொல் இனிமையைக் குறிக்கும் மதுரமான தமிழ்
இந்நகரில் எப்போதும் (எக்காலத்திலும்) சிறப்பாக செழித்து வாழ்வதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது மேலும் ஈசன் தன் சடாமகுட அமிழ்து சிந்தி எங்கும் மதுரம் கமழ்ந்ததால் இந்நகர் மதுராபுரி எனும் பெயர் பெற்றது
இந்நகரை சுற்றிலும் மருதவளம் மிகுந்து விளங்குவதால் இந்நகர் மருதை
எனவும் வழங்கப்பட்டது.

சற்றே நீந்தி
பஃறுளி ஆற்றின் கரைக்கு வருவோம்...,

இதோ அகலவிரிந்து அதிசயிக்கும் நம கண்களுக்கு விருந்தாய் நெடிதுயர்ந்த மாடங்களும் மாளிகைகளும், அகலவிரிந்த சாலைகளும், வணிகத் தெருக்களும் ஆடல்மகளிரும் புலவர் பெருமக்கள் கூடல் கொள்ளும் தலைச் சங்கம் தெரிகிறதே மக்காள்..., அஃதே நம் தலைச் சங்கம் கட்டிக் காத்த தென்மதுரை மக்காள், தென்மதுரை..., தென்மதுரை எனக் கூறக் காரணம் இன்றைய மதுரையில் இருந்து தெற்கே கடல் கொண்ட குமரியில் அது இருந்தமையால்.,


வந்ததோர் ஆழிப்பேரலைகளைத் தாங்கிய முதலாம் கடல்கோள்
ஆண்டு தான் கி.மு. 2387 அழித்தொழித்துச் சென்றது அமிழ்தினும் இனிய தமிழ் காத்த நம் மதுரையை அந்த அழிப் பேரலை..., ஓய்ந்தது நாமல்ல., மக்காள்
நம் தாய் தமிழுமல்ல., ஆரவாரங்கொண்ட அந்த ஆழிப் பேரலை தான் அழிந்து அமைதி கொண்டது நகர்ந்தான் பாண்டியன் குமரிக் கண்டத்தின் வடக்கு நோக்கி.., கவாடபுரத்தினை தலைநகராய் கொண்டு இரண்டாம் மதுரையை அமைத்தான் அதிலும் மறவாது தன் தாய் தமிழ் செழிக்க இடைச் சங்கத்தை நிறுவினான்.., கடவுளுக்கும் கட்டுப்படாத அந்த காலச்சக்கரம் சுழன்ற ஆண்டுகள் ஏறத்தாழ 1803 ஆண்டுகள் ஆம், மீண்டும் மதங்கொண்ட அதே ஆழிப்பேரலைகளைத் தாங்கிய இரண்டாம் கடல்கோள் காலம் கி.மு.504
சின்னாபின்னமாக்கிச் சிரித்தது மண்மேடாய் போன தன் மதுரையைக் கண்டு சிறிதும் கலங்காத அன்றைய மதுரைக்காரன், சிறிதும் தாமதியாது மணவூரைத் தலைநகராக்கினான்

அசுரகதியில்...,

அந்தோ பரிதாபம்...?!

எங்கே இவன் இங்கும் சங்கம் வைத்து தமிழ்வளர்ப்பானோ...?
என நினைத்ததோ என்னவோ...?
வந்த சோகத்தின் ஈரம் காயும்முன்னரே..,
வந்தழித்தது மூன்றாம் கடல்கோள் 198 ஆண்டுகளே ஆண்ட மணவூரை பாண்டியர்களின் கையில் இருந்து கடல் கொண்டது.
மாபெரும் சரித்திர சோகம் ஆம் கி.மு. 306ஆண்டு நடந்த மூன்றாம் கடல்கோள் சந்ததிகள் காணாதவாறு அழித்தது என்றால் மிகையல்ல..,
நடந்தது எல்லாம் தாங்கி இரும்பென இருகி மீண்டும் வடக்கு நோக்கி நகர்ந்தான் அன்றைய பாண்டியன்

"பாண்டியன் முடந்திருமாறன்" 

கி.மு. 306 ஆண்டு இன்றைய தமிழகத்தின் தெற்கே கடல் துண்டித்த விழுங்கிய குமரியில் இருந்து விலகி இன்றைய இந்த மதுரையை தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசை நிறுவினான்.
அவனே கடைச்சங்கத்தினையும் நிறுவி தன் தமிழைக் காத்தான் இதுவே தொல்காப்பியம் சுட்டிக்காட்டும் தமிழகமும் ஆகும்.
இதயம் கனக்க
கண்ணீர் மல்க
சற்று ஆணவத்தோடே..,
ஒரு மதுரைக் காரனாய் சொல்கிறேன்.
உலகில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள்,இனங்கள் போர்களினாலும்
இயற்கையாலும் ஏற்பட்ட அழிவில் இருந்து தங்களை காத்து மீண்டும் புத்துயிர் பெற்ற சரித்திரங்கள் பல இருக்கலாம்
ஆனால்...,
ஒரு இனம்
இயற்கை பேரழிவுகளைக் கடந்து உயிரினும்
மேலாய் மதித்த தன் மொழியை மட்டுமல்ல தான் வாழ்ந்த நகரத்தையும் தான் புலம் பெயர்ந்த இடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுவி
5000 ஆண்டுகளுக்கும் மேலாய் மதுரை எனும் நகரை உலகப் பந்தே வெடித்தாலும்
இனி அழியாதடா
என் மதுரை என நீருபனம் செய்தவன் மதுரைத் தமிழன்.
மதுரையின் மிகச் சிறந்த நகர நிர்மாணத்திற்குமே..., ஏற்கனவே அவன்(மும் மதுரையும் நிர்மாணித்த பாண்டிய மன்னர்கள்) மூன்று நகரங்களை நிறுவிய நிர்மாண அனுபவ அறிவே காரணம்.
பல்லாயிர வருட பாராம்பரியமும்
மொழிப் பற்றும்
கொண்ட என் மதுரை இனி

மதுரையல்ல..., "மாமதுரையே"

இந்நகரத்தின் பழங்கதைகள்,சிறப்புகள்,தொன்மை,
பற்றிய இந்த இயற்கை விரும்பியின் தேடல்கள் உணர்வுடன் தொடரும்....,


Thursday, April 05, 2012

தமிழச்சி.....?!

ஏழ்மையில் தமிழா .......அல்ல 
ஏழ்மையிடம் தமிழா ......!!!
என்றொரு கேள்வி என்னிடம் நீண்ட நாட்களாய் உண்டு .
நேற்று (17/01/2012) அந்தி தீரும் நேரம் மதுரையில் இருந்து பேருந்தில் கோவை நோக்கிய என் பயணம்........இடையே குழந்தையின் அழுகுரல் சிறிதாய்  ஆரம்பித்து பின் சற்று கடினமாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 
முதலுதவியாய் முதலில் இரு முத்தங்கள் தாயிடமிருந்து...,இருப்பினும் தொடரும் அழுகுரல் ........அடுத்த கட்ட நடவடிக்கையாய் மராப்பிற்குள் மழலையின் முகம்.......இருந்தும் தொடரும் அழுகை......!!  
குழந்தைக்கு பசியுமில்லை ........தாய்க்கு புரிந்தது ......!!
ஏன்.......எனக்கும் தான்.......!!!
தீர்வுக்கு மருந்து தாலாட்டாய் வந்தது......,,,
அந்த தமிழச்சியிடமிருந்து .........அதுவும் அவையஞ்சாமையுடன்.......!!!
வெட்கப்படாமல்(தாலாட்டு பாடுவது தான்) ஏன் கூற மனமில்லை ...... ஏனெனில் பெண்மையின் அடையாளமே வெட்கம் தானே .............!!!
ஆகையால் பொதுவிடத்தில் தமிழ் பேசுவது..., 
இழிவென்போர் வேண்டுமாயின் வெட்கப்படட்டும் .......??!
ஏன் தாயிடமிருந்து நான் கெட்ட தாலாட்டு .......
என் மகன் அவன் தாயிடம் கேட்காத தாலாட்டு ....,,
ஏன் தமிழே மறந்ததோ...?!
என நான் நினைத்திருந்த அந்த தாலாட்டு அருமையாய் ...,அற்புதமாய்...,
ஆனந்தத் தாண்டவமாடியது அப்பேருந்தில் ...அந்தத் தமிழ்ச்சியினால் .....!!!


நின்றது மழலையின் அழுகை..........!!!


நிசப்தம் நிலவிய பேருந்தில் நடத்துனர் உள்ளிட்ட அனைவரும் உறக்கத்தில்.., 
அவளின் தாலாட்டால்....!!
கடமை கருதி நானும் .....ஓட்டுனரும்....தமிழச்சியும்.....உறங்காமல்......?!
ஒட்டுனருக்கும் தாயுக்கும் ....,சரி உனக்கென்னடா கடமை என்பது .....,
என் காதிலும் விழுகிறது....!!!  
கைபேசியில் காணொளியாய் எடுத்துக் காட்டி விடலாம் உங்களுக்கு ...,
என்கிற எனது கடமையை தடுத்தது சூழல்...!! 
நான் எடுக்க நினைப்பது தமிழும் தாய்மையும் ......
என்றெண்ணாமல் தாய்மையின் அடையாளங்களை என........ 
விழித்துக் கொள்வோரெல்லாம் நினைத்துக்கொண்டால்......!!! 
ஆதலால் அவ்வெண்ணத்தை தவிர்த்தேன்......
ரசித்தேன்....!!
நானும் ஒரு குழந்தையாய் அந்தத் தாயின் தாலாட்டை.....,
நீண்ட ரசனைக்குப்பின் தோன்றியதோர் எண்ணம...,
குரல் பதிவியில் அந்த தாலாட்டை பதிவு செய்ய எண்ணி .......,
கைபேசியில் அந்த அமைப்பை தேடுவதற்குள்.....
அவளின் தாலாட்டே....
அவளையும் உறங்கவைத்து விட்டது .....!!
ஏமாற்றமாய் நான்,,,, 
இருப்பினும் எனது நீண்ட நாளைய கேள்விக்கு விடை கிடைத்தது .........
அழுகுரல் கேட்டு திரும்பிய போதே.....அப்பெண்ணிடம் ஏழ்மையை அவளின் தோற்றத்தில் கண்டேன்.......ஆதலால் தான் அவளிடம் தமிழோ......!!?   
தமிழிடம் ஏழ்மை எனில் என்ன வளம் இல்லை........,
என் தமிழ்த்தாயிடம் எனக் கூறுவோர் உண்டோ.....!? வளமுள்ளவர்ஏற்காத தமிழ் வறுமையிடம் குடி புகுந்ததோ.....!?  
என நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே.........
பேருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை நெருங்கியது .............
அப்பொழுது ஏற்பட்ட  போக்குவரத்து இடையூறினால் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே நின்ற பேருந்தில் இருந்து அவசரமாய் இறங்க முற்பட்ட அந்த தமிழச்சி............அவசரமாய்.......அழைத்தால் அவளின் வயது முதிர்ந்த அன்னையை


"ஜல்திங்க திகம்மா ...........சிக்னல் முடிஞ்சிந்த லோக திகவள.........."


இவ்வாறாக சுந்தரத் தெலுங்கினில்........!!!
ஆண்டவா........!!!! 

அவளும் தமிழச்சிதான் 


அன்னைத் தமிழில் ஆராரோ.....ஆரிரரோ.......பாடியதால்.......!!!!    
   

Wednesday, March 28, 2012

யோசிக்க வைத்த கேள்வி....!!


நண்பர்கள் நாலு பேர் பேசிக்கொண்டிருந்தோம்....

ஒரு நாள் மாலைபொழுதினில்....மதுவின் பிடியிலும் கூட...  
நிஜம் தான் புனைவல்ல....இது...!!! 
நண்பர்களில் ஒருவர் ராமாவதாரத்தில் இருந்து 
கிருஷ்ணாவதாரத்திற்கு மாறிவிட்டார் சமிபகாலமாய்....
என்ன புரியலையா...? 
புரியாதவர்க்கு புரிய... முருகனும்  ....ஏன்..அவன் அப்பனும் தான்.....!!!
செட்டப்பு வச்சுகிட்ட மாறி இவரும் வச்சுக்கிட்டார்......விஷயம் இவ்வளவ்வு தான்..!!!
நண்பேன்னா..!!! நண்பேன்,,,தவறா போகும் போது...கண்டிச்சு திருத்துனா தானே...
நல்ல நண்பேன்ன்னு ஊரு சொல்லும்.....!! அதற்காக அவரை எல்லோரும் 
இடித்துரைத்து ...திருந்தச் சொன்னோம் .....இப்பத் தாங்க அந்த கேள்வியே வந்துச்சு......
"வாய்ப்பு கிடைகாதனால நீங்கல்லாம் யோக்கியனுகளா ..?   இல்ல வாய்ப்பு கிடைச்சாலும் நீங்கல்லாம் யோக்கியனுகளா..?" இது தாங்க அந்த கேள்வி
கேட்ட மவராசே...அவன்பாட்டுக்கு மப்புல....கேட்டுட்டான்...ஆனா...!!     
இந்த கேள்வி பலமுறை என் மனக்கண்ணில் அல்ல காதில் 
மீண்டும் மீண்டும் ஒலித்தது..உண்மை புரிந்தது 
கோயிலின் குருக்கள் குடிக்காமலிருப்பது பெரிதல்ல...!
சாராயக்கடையில் பணிபுரியும் குப்பனும்,சுப்பனும் குடிக்காததே பெரிதென்று...!!  
தவறிழைக்கும் வாய்ப்பே வாய்க்கப் பெறாத ஒருவன் என்றேனும் வாய்ப்பு கிடைக்கும் போது 
தடுமாற்றம் ஏறபடின்...இதுகாறும் தவறிளைக்காது இருந்து பயனில்லை....தவறிழைக்கும் வாய்ப்புகளுக்கு
மத்தியில் தடுமாறாமல் வாழ்பவனே மனிதன் எனும் உண்மையை அந்த கேள்வி எனக்கு விடையாய் தந்தது...!     .   


Tuesday, December 13, 2011

தென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாதீபம் -2011


திருக்கார்த்திகை மகாதீபம்


இந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்....



இணைய நண்பர்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும் என்ற   எண்ணத்துடனே தான் மலை ஏறினேன்....


ஆதலால் ஒவ்வொரு வருடமும் குளிருக்கு பயந்து குகைக்குள்
 இருந்ததை இம்முறை விடுத்து 

  

வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு நடந்த அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்...நாதனின் குகைக்குள் அமர்ந்து எடுத்ததை நீங்களும் கண்டு களியுங்கள்....!!!!

நமசிவாயனுக்கு நடந்த அபிஷேகபூஜைகளும் ஆராதனைகளும் 

















ஆண்டவர் வெள்ளிங்கிரினாதருக்கு நடந்த அலங்கார பூஜைகள் 












மகா தீபமேற்றல் 







வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மலைப்பாதையின் அருகிலேயே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை.....!! 


வெள்ளிங்கிரி நாதனை தரிசிக்க ஏழு  மலைகளையும் இயற்க்கை காட்சிகளையும் இந்த புகைப்பட காட்சியில் நீங்களும் கண்டு களியுங்கள் 

https://picasaweb.google.com/sumarudha/2011?authuser=0&feat=directlink



நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க 

Friday, November 25, 2011

ரெம்போ....பசிக்குதா....? கவலைவேண்டாம் இங்கே வாங்க.....!!

ரெம்போ....பசிக்குதா....?


 கவலைவேண்டாம்...!!


இங்கே வாங்க.....!!


இந்தப் பாட்டுல..



எல்லாம் இருக்கு ........



எடுத்துக்கங்க...... 








திருப்தியா.......சாப்பிட்டுட்டீங்களா......!!

Sunday, August 07, 2011

கவின்மிகு குற்றாலம்...!!

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்,
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'


இந்த பாடலில் வரும் குற்றாலத்தின் இயற்கை அழகை காண சிறுவயதில் இருந்து ஆவல் கொண்டதுண்டு., ஆனால் அந்த வாய்ப்பு கல்லூரி நாட்களில் தான் கிடைத்தது. அந்த நாளில்..., முதன் முதலில் குற்றாலத்தை பார்த்து அதன் அழகில் மயங்கிய நாங்கள் ஒவ்வொரு வருடமும் நண்பர்களனைவரும் தவறாது குற்றாலம் வருவதென முடிவெடுத்தோம். ஆண்டுகள் இருபதிர்க்கு மேலாகிவிட்டது,வருடாவருடம் ஒருசில நண்பர்கள் விடுபட்டாலும் குறைந்தது பத்து பேராவது தவறாது இன்று வரை சென்று வருகிறோம் என்பதை நினைக்கும் போது மனதில் மட்டற்ற இளமை ததும்பும் மகிழ்ச்சி நிலவுகிறது.