Sunday, December 27, 2009

நேசித்துப்பார் இயற்கையை"தனியோருவனுக்கிங் குணவில்லை எனில் "

இச் செகத்தினை அழித்திடுவோம்

என

கொதித்தெழுந்த

நீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா!!

காணி நிலம் வேண்டும்

பராசக்தி

காணி நிலம் வேண்டும்

என இயற்கையையும் அது சார்ந்த வேளாண் வாழ்வையும் நேசித்தும்

இருக்கிறார்

இன்றைய இளைஞர்களின் கவனம்
உழவின் பக்கம் இல்லை.அவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறாது ,தானே
உழைத்துக் காட்டவே! தன் அன்னையிடம் காணி நிலம் கேட்டுள்ளார்.
அதற்குள் அன்னை தன் மகனை எடுத்துக்கொளல் என்ன நியாயமோ ?
இது என் பார்வை....!!

ஒரு நகர இளைஞனாக,நாம் ஒரு சில காத தூரம் நகரத்தை விட்டு
வெளியேறிச் செல்லும் போது காணும் வயல் வெளிகளும்,பசுமைகளும்,
சோலைகளும் மரங்களும்.. மனதை எவ்வளவு மகிழ்விக்கிறது .
இதையே நாம் உண்டாக்கி பார்த்தால் அந்த மகிழ்ச்சியை என்னவென்று
கூறுவது?!!

அந்த மகிழ்வை உணர்ந்தேன்!!! உணர்ந்ததால் உணர்ந்ததை கூறுகிறேன்

இளமையில்
சங்கம் வளர்மதுரையின் மைந்தன் யான்,
நகரத்தின் நடுவே அன்னையின் ஆலயத்திற்கு அருகில் என் இல்லம்.
நூறு சதவித நகர வாழ்க்கை. நாங்கள் விளையாடிய விளையாட்டு மைதானமோ,
அங்கையர்க்கன்னியின் ஆடி வீதி. நான் பார்த்த ஆறு ,குளம் ,கடல் , அனைத்தும்
அங்குள்ள பொற்றமரைக்குளமே, பள்ளி விடுமுறை நாட்களில் என் அம்மானின்
கிராமத்திற்கு செல்லுகையில் அங்கு நான் காணும் காட்சிகளும், மனதை தீண்டும் ஆனந்தத்திற்கும், எல்லையில்லை.
அதன் பாதிப்புகள் என் இளம் நெஞ்சினிலிருந்தே, பதிந்ததின் விளைவு ,
இன்று நான் பாரதியின் காணி நிலத்தில்!!

நெஞ்சமது நினைப்பதெல்லாம் ,எல்லோரும் ஏர் காலை தூக்கிக்கொண்டு
உழச் செல்லவேண்டுமென்ற நடை முறைக்கு ஒவ்வாத கருத்தையல்ல.
நகர வாழ்வின் மீது மோகம் கொண்டு கிராமமெனும் சொர்க்கம் தனை
இழந்து , வாழ்வதை தவிர்த்து , இயற்க்கை சார் வாழ்க்கை தரும் நன்மைகளும்,
அது தடுக்கும் தீமைகளையும் புலப்படுத்துவதாகும்.

இயற்கையை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் , நண்பநென்பவன் நம்மை துன்பங்களில்லிருந்து காக்ககுடியவனாவான் .ஆனால் இயற்க்கையோடினைந்த வேளாண் வாழ்வு நமக்கு துன்பங்களே வராமல் தடுக்கும் வல்லமையுடைத்து,... எவ்வாறேனும் காரணங்களை வரிசைப்படுத்துகிறேன்
முதலில் ஒவ்வொரு படித்த நல்ல, சுயதொழிலில்,உயர்ந்த பதவியில் உள்ள இளைன்ஞர்கள் தங்களுடைய
வாழ்வியலை நகரத்தில் அமைத்துக்கொள்வதை நிறுத்தி ,வேளாண் முறையில்
பண்ணை வீடுகளாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் .இன்றைய விஞ்ஞான
உலகில் தூரம் ஒரு பெரிய பொருட்டல்ல ஏனெனில் போக்குவரத்து முன்னேற்றங்களால்
உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது.
அவ்வகை பண்ணை வீடுகளில் பகுதி நேர உழைப்பாக அதிகாலையும்
மாலையும் உழைத்து உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை நாம்
மேற்கொள்ள முடியும், அதைப்போலவே தொழில் போட்டிகளிலும் , வேலைப்
பளுவினாலும் ஏற்ப்படும் மன அழுத்தத்தை பிராணிகள்,பறவைகள் வளர்ப்பு
இவற்றின் மூலம் களையவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும் . அடுக்குமாடி
குடியிருப்புகளின் வாழ்க்கை முறையை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வதென்பது
எனக்கு தெரியவில்லை.
அது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சிறை வாசம்
உடைத்தெறியுங்கள் அந்த குறுகிய மனப்பான்மையையும் ,நவினமென்று ,நாம் நினைக்கும்
அடுக்குமாடி சிறைவாசத்தையும், சூரியக்கதிர்களே! உட்புகாத சூன்ய பிரதேசங்கள் அவை.
வாருங்கள் இயற்கைசார் உலகத்திற்கு!!
இறந்த பின் அல்ல, இருக்கும் போதே சொர்க்கம் காண்போம்!!
அனைவரும்
இவ்விசயத்தில் ஆர்வலர்களாகிவிட்டால் , நம் இந்தியத்தில் இல்லை இனி
பாழ் நிலங்கள்!!!! பாழ் நிலங்கள் இல்லாத போது நாட்டில் பற்றாக்குறை என்பதேது ???
இயற்க்கை அளவிட முடியா பொக்கிஷம்!!!! அதைப்போலவே அதன் நன்மைகளும்

சொல்லிக்கொண்டே போகலாம் . உருவாக்கிப்பாருங்கள் ஒரு பண்ணைவீட்டை ,
நட்டு வைத்துப் பாருங்கள் ஒரு மரக்கன்றை, ஒரு தாயின் மகப்பேற்றை உணரலாம்.
அந்த நெஞ்சில் காதல் பிறக்கும் ,கருணை பிறக்கும் ,ஏன் இயற்க்கை அனைத்து
நற்குணங்களையும் தரவல்லது. இதை நான் சந்தித்த என் தம்பி கவிஞர்,ஈசதாசன்
செல்லத்துரை கூறியது.
அவரது கவிதையால் உங்களது மனம் இயற்கையை காதலிக்கட்டும்.
இயற்க்கை
அடர்ந்த காட்டுக்குள்
ஆங்காங்கே வான் தெரிய
பெயர் தெரியா மரங்கள்
பெயர் தெரியா மலர்கள்
பெயர் தெரியா மணங்கள்
ரசித்துக்கொண்டே நடந்தால்
கற்காதவனுக்கும்
கட்டுக்கடங்கா அருவியாய்
கொட்டும் கவிதை!!!!
இயற்கையை காணும்
பொழுதினிலேல்லாம்
இளமையைத் தாண்டி
மழலைகளாகின்றன
விழிகள்!
மழையில் நனையும்
பொழுதினிலேல்லாம்
கரைந்து கரைந்து
மழழையாகின்றது
எந்த ஒரு முதிர்ந்த
மனதாயினும்!
எத்துணை தாகமாயினும்
அடங்கி விடுகிறது
கண்கள் நிறைய
நிறைந்தோடும் நதியைக் காண்கையில்!
எத்துணை துயரமென்றாலும்
இதயம் கவலையில்
நிறைந்திருந்தாலும்
தூக்கம் சொக்கி வந்துவிடும்
தாய் மடி இரவில்!
கிடைக்காத நிம்மதியும்
தந்து விடும்
கரையில் அமர்ந்திருந்தால்
கால்களை தொடுகின்ற
கடல் அலைகள்!
காயங்கள் களவாடி
களவாடிய இடத்தில்
இதமான சுகம் தரும்
இயற்க்கை!
கனமான மனம்
கண்டால் கனத்தை பிடுங்கி
காற்றில் நிறைந்த
மணத்தை தரும்
இயற்க்கை!
கல்லுக்குள் புதைந்திருக்கிறது
கடவுள் என்றால் அது பிழை!!
கல்லுமாய் ,
கல்லுக்குள் நெருப்புமாய்!
ஏன்
கடவுளுக்குள்ளும்
புதைந்திருக்கிறது
எம் இயற்க்கை!
உலகம் மட்டுமல்ல நம்
உடலும் நிறைந்திருக்கிறது
இயற்க்கை!
உப்பின் வடிவில்
உடலுக்குள் நுழைகிறது கடல்!
வெப்ப வடிவில்
உடலுக்குள் நுழைகிறது
சூரியன்!
வேக வைத்த விதைகளாய் உடலுக்குள்
புதைகிறது தாவரங்கள்
வேறோர் வடிவும் இல்லாமல்
நேராய் உடலுக்குள் நுழையும் நீர்!
மாற்றார் வேடமின்றி நுழைகிறார்
காற்றார்!!
என
உடலுக்குள்ளும்
விழிகளுக்கு
வெளியிலும்
நிறைந்து கிடக்கிறது
இயற்க்கை!!!
கவிஞர், ஈசதாசன்
என் வீட்டுத் தோட்டத்தில்
இயற்கையை வாழ வைத்து நாமும் வாழ்வோம்!
4 comments:

 1. செயற்கை விரும்பிJanuary 21, 2010 at 4:30 AM

  "யாருமே இல்லாத கடைல யாருக்குயா டீ ஆத்துறீங்க?"

  ReplyDelete
 2. ஏன் சார்.......
  உங்களுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா?
  இல்லை... எங்களுக்கு தான் எதுவும் இல்லையின்னு நினைச்சுட்டீங்களா?

  "போங்கப்பா.. போயி புள்ள குட்டிங்கள நல்லா படிக்க வையுங்க. போங்க.. "

  ReplyDelete