Friday, December 11, 2009

தென் கைலாய பயணம்!!(வெள்ளிங்கிரி)


கார்த்திகை மகா தீபம்


dsc00004y.jpg



நகர இரைச்சலுக்கு நடுவே அமைதியான சொர்க்கபுரி என் கிராமம் .ஆம் !கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைகளின் அடிவாரம் எனது ஊர் .எங்களது கிராமத்தில் ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மேல் சென்று ஊரார் தீபமேற்றுவது வழக்கம் . ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரமில்லாத மனிதனை இயற்க்கை நோக்கி செல்ல வைக்கும் ஒரு அற்புத திருவிழா அது .கணினிக்கு நாம் ரிப்ராஸ் கொடுத்து இளைப்பாற செய்வது போல் ,என் கிராமத்தார் வருடத்திற்கு ஒரு முறை தங்களை இயற்கையோடு ஒன்டரினைததுக்கொள்ளும் ஓர் அற்ப்புத திருவிழா. ஆம்!, அன்று காலை ஊர் பெரியவர்கள் மேலே மலைக்கு செல்லும் இளைஞர்ளையும் அவர்களது உடமைகளையும் வைத்து ஊர் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வழி அனுப்பி வைப்பார்கள் ,மேலே பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ,ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாக ஒப்படைத்து அனுப்பப்படும் . இதில் எடை குறைவான பொருட்களை எடுக்க எங்களுக்குள் போட்டி நடப்பது வேறு விஷயம் !


இனி மலைபயணம்........




பிறவிகளை கடந்த பயணம்



photo0043hk.jpg




இந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் தன்னை வணங்கியவர்களுக்கு முக்தி மட்டுமே தருபவராம்! அதனால் தானோ என்னவோ? நமது ஏழு பிறப்பின் துன்பத்தையும் இப்பிறவியிலேயே வாங்குவதற்காக எழாவது மலையில் சுயம்புவாக தோன்றி இருக்கிறார் . சோ! நாம் கட்டாயம் ஏறி ஆக வேண்டும் முதலில் அடிவாரத்தில் இருக்கும் அவரை வணங்கி மலை ஏற தொடங்குவோம்.இதில் முதல் மழையும் ,வழுக்குபாறை என்ற இடங்களும் நம்மை "வந்துபார்" என்று சொல்லுவது நம் காதுக்கு கேட்கிறதோ இல்லையோ நம் காலுக்கு நன்றாக கேட்கும் . நமது கால்கள் "என்னை விட்டுடா" என்பது நமக்கு நன்றாக கேட்கும்! இதை எப்படியாவது கடந்து விட்டால் !!!!
நமது கண்களையும் கருத்தையும் ஏன்! நம் ஐம்புலன்களையும் ஆனந்தப்பரவசப்படுத்துவால் இயற்க்கை அன்னை அற்ப்புதமான சமவெளிகளும், மலை முகடுகளும்,இயற்க்கை எழில் சூழ் வனங்களும், மேகத்தின் உரசல்களும், தாகத்திற்கு கிடைக்கும் இயற்கையின் பிஷ்லரிகளும் ஏராளம்! இருந்தாலும் மனித வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது போல் இடையிடையே நமது பாதையிலும் ஏற்ற தாழ்வுகள்???????

வந்துதான் தீரும்! என்ன செய்வது? கடினப்பட்டு ஆறு மலைகளையும் கடந்து நமச்சிவாயனின் பொற் பாதங்களான எழாவது மலையின் அடிவாரத்தை அடைந்தால் நாம் இதுவரை நடந்து வந்த களைப்பையும் ,மனஇறுக்கத்தையும் ,போக்க புண்ணிய தீர்த்தமாம் ஆண்டி சுனை நம்மை அன்புடன் அரவணைக்கும்.

dsc00007io.jpg

அதில் குளித்து எழுந்ததும் ஏதோ புதிதாய் பிறந்த மான்குட்டியின் புத்துணர்வை போல நமது உடலும் மனமும் மாறும். அந்த உணர்வுடனே பயணத்தை தொடர்ந்தால் பிரம்மாண்டத்தின் பொருளை நேரில் தரிசிக்கலாம், அனால் காணத்தான் கண் போதாது. தெய்வீகம்!!!!!!"தெய்வீகம்" என்று விவரித்து என் அந்த மகா சிலிர்ப்பை குறைத்து கொள்ள என்னால் இயலவில்லை!மேலும் சொல்ல முயல்கிறேன்..........மலை உச்சி , அதற்கு மேல் செல்ல இடமில்லை........ஆனாலும் இருக்கிறது?அதுநமசிவாயனின் முடி

(சுயம்பு லிங்கேஸ்வரரின் குகை கோவில்)

vellingiri11.jpg

ஈஸ்வரனின் முடியை தொட நினைத்த பிரம்மனின் கதை தான் நாம் அறிவோமே!!அதனால் அது வேண்டாம் நமக்கு.நான் நிற்பதோ நாதனின் தாள், அது இருப்பதோ சிகரத்தின் மேல்!!இறைவனின் அடி சேர்வதோ ஆன்மா மட்டுமே. இங்கோ ஆன்மாவோடு நானும் இருக்கிறேன்!!!இந்த அற்புதம் தான் அந்த தெய்வீகம்!!!!!!!!!!!!!!!



மகா தீப வழிபாடு



dsc00025yu.jpg

மேற் சொன்ன அற்புத உணர்வோடே தென் கைலை நாதனை போற்றி வணங்கி செங்கதிரோன் சென்ற பின் செங்கதிர் திரு நெய் தீபம் ஏற்றினோம். நீங்களும் பாருங்களேன்........

நமசிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க..





No comments:

Post a Comment