Thursday, April 05, 2012

தமிழச்சி.....?!

ஏழ்மையில் தமிழா .......அல்ல 
ஏழ்மையிடம் தமிழா ......!!!
என்றொரு கேள்வி என்னிடம் நீண்ட நாட்களாய் உண்டு .
நேற்று (17/01/2012) அந்தி தீரும் நேரம் மதுரையில் இருந்து பேருந்தில் கோவை நோக்கிய என் பயணம்........இடையே குழந்தையின் அழுகுரல் சிறிதாய்  ஆரம்பித்து பின் சற்று கடினமாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 
முதலுதவியாய் முதலில் இரு முத்தங்கள் தாயிடமிருந்து...,இருப்பினும் தொடரும் அழுகுரல் ........அடுத்த கட்ட நடவடிக்கையாய் மராப்பிற்குள் மழலையின் முகம்.......இருந்தும் தொடரும் அழுகை......!!  
குழந்தைக்கு பசியுமில்லை ........தாய்க்கு புரிந்தது ......!!
ஏன்.......எனக்கும் தான்.......!!!
தீர்வுக்கு மருந்து தாலாட்டாய் வந்தது......,,,
அந்த தமிழச்சியிடமிருந்து .........அதுவும் அவையஞ்சாமையுடன்.......!!!
வெட்கப்படாமல்(தாலாட்டு பாடுவது தான்) ஏன் கூற மனமில்லை ...... ஏனெனில் பெண்மையின் அடையாளமே வெட்கம் தானே .............!!!
ஆகையால் பொதுவிடத்தில் தமிழ் பேசுவது..., 
இழிவென்போர் வேண்டுமாயின் வெட்கப்படட்டும் .......??!
ஏன் தாயிடமிருந்து நான் கெட்ட தாலாட்டு .......
என் மகன் அவன் தாயிடம் கேட்காத தாலாட்டு ....,,
ஏன் தமிழே மறந்ததோ...?!
என நான் நினைத்திருந்த அந்த தாலாட்டு அருமையாய் ...,அற்புதமாய்...,
ஆனந்தத் தாண்டவமாடியது அப்பேருந்தில் ...அந்தத் தமிழ்ச்சியினால் .....!!!


நின்றது மழலையின் அழுகை..........!!!


நிசப்தம் நிலவிய பேருந்தில் நடத்துனர் உள்ளிட்ட அனைவரும் உறக்கத்தில்.., 
அவளின் தாலாட்டால்....!!
கடமை கருதி நானும் .....ஓட்டுனரும்....தமிழச்சியும்.....உறங்காமல்......?!
ஒட்டுனருக்கும் தாயுக்கும் ....,சரி உனக்கென்னடா கடமை என்பது .....,
என் காதிலும் விழுகிறது....!!!  
கைபேசியில் காணொளியாய் எடுத்துக் காட்டி விடலாம் உங்களுக்கு ...,
என்கிற எனது கடமையை தடுத்தது சூழல்...!! 
நான் எடுக்க நினைப்பது தமிழும் தாய்மையும் ......
என்றெண்ணாமல் தாய்மையின் அடையாளங்களை என........ 
விழித்துக் கொள்வோரெல்லாம் நினைத்துக்கொண்டால்......!!! 
ஆதலால் அவ்வெண்ணத்தை தவிர்த்தேன்......
ரசித்தேன்....!!
நானும் ஒரு குழந்தையாய் அந்தத் தாயின் தாலாட்டை.....,
நீண்ட ரசனைக்குப்பின் தோன்றியதோர் எண்ணம...,
குரல் பதிவியில் அந்த தாலாட்டை பதிவு செய்ய எண்ணி .......,
கைபேசியில் அந்த அமைப்பை தேடுவதற்குள்.....
அவளின் தாலாட்டே....
அவளையும் உறங்கவைத்து விட்டது .....!!
ஏமாற்றமாய் நான்,,,, 
இருப்பினும் எனது நீண்ட நாளைய கேள்விக்கு விடை கிடைத்தது .........
அழுகுரல் கேட்டு திரும்பிய போதே.....அப்பெண்ணிடம் ஏழ்மையை அவளின் தோற்றத்தில் கண்டேன்.......ஆதலால் தான் அவளிடம் தமிழோ......!!?   
தமிழிடம் ஏழ்மை எனில் என்ன வளம் இல்லை........,
என் தமிழ்த்தாயிடம் எனக் கூறுவோர் உண்டோ.....!? வளமுள்ளவர்ஏற்காத தமிழ் வறுமையிடம் குடி புகுந்ததோ.....!?  
என நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே.........
பேருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை நெருங்கியது .............
அப்பொழுது ஏற்பட்ட  போக்குவரத்து இடையூறினால் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே நின்ற பேருந்தில் இருந்து அவசரமாய் இறங்க முற்பட்ட அந்த தமிழச்சி............அவசரமாய்.......அழைத்தால் அவளின் வயது முதிர்ந்த அன்னையை


"ஜல்திங்க திகம்மா ...........சிக்னல் முடிஞ்சிந்த லோக திகவள.........."


இவ்வாறாக சுந்தரத் தெலுங்கினில்........!!!
ஆண்டவா........!!!! 

அவளும் தமிழச்சிதான் 


அன்னைத் தமிழில் ஆராரோ.....ஆரிரரோ.......பாடியதால்.......!!!!    
   

No comments:

Post a Comment