Monday, June 16, 2014

பெண்ணாய் பிறந்திருக்கலாமோ...?










நேற்று 

மதுரையில் நான்
நீண்ட நெடு நாட்களுக்குப்பின்
ஆண்டுகள் பலகடந்து
பார்த்தேன் 

என் பள்ளித் தோழியை
அவள் பேரனுடன்....!!
வாழ்க்கை இத்துணை
வேகமாய்...,
ஏன்..? இவர்களுக்கு (பெண்களுக்கு)
மட்டும்..,


எனக்குள் மிச்சமிருக்கும்
இளமைக்கால நினைவுகளின் எச்சங்கள்.... சற்று
படபடப்புடன்....,
அவளுக்கு என்னை நினைவிருக்குமா....?
என்ற கேள்வியாய்....
என் நெஞ்சம்
நெகிழ்ந்துகொண்டிருக்கையில்
என் இதயமே.... நின்றது
காரணம் எனை அழைத்து விட்டு
அவள் நின்றதினால்...!
நான் நிற்குமுன்
நின்றது என் இதயம்

என்ன... உனது மகனா?
என்றேன் கேலியாய்...,
எழுபதுகளில்
சிலேட்டுக்குச்சி தரமறுத்தபோது
அவள் முகத்தில் கண்ட
அதே கோபம் இன்றும்...
"ஹேய் என் பேரன்...."
என்றபடி.

பேச்சின் தொடர்ச்சி...
எங்களுடன் பயின்ற
"விஜயகுமார் எங்கிருக்கான்" என்பதாய் நீண்டபொழுது
அவள் முகத்தில் வந்த
அதே கோபம்
இக்கணம் என்னிடம்
காரணம் அந்த நாள் ஞாபகம்....,

சிவப்பாய்... அழகாய் இருந்த அவன்
அதனாலேயே....,
அவனிடம் அதிகம் பேசும்
அந்நாளைய இதே தோழி
இதனாலே....
நண்பனாய்
இருந்தாலும் அவன்
என் ஆழ்மன போட்டியாளன்
என் கோபத்தின் பொருள்
உணர்ந்தவளாய்...., 
சிரிப்புடன்...
"சரி விடு
இன்னும் நீ
அப்படியே இருக்க..."
என்று கூறி நிகழ்காலத்திற்கு
அழைத்து வந்தாள்.

ஏதேதோ...., ஏராளமாய்
பேசிவிட்டு விடைபெற்றேன்.
வழியெங்கும் அன்றைய
நினைவுகளுடன்...,
இடையே விழியை வழிமறித்தது
அவளுக்கும் எனக்கும்
அகரம் சொல்லித் தந்த அந்த "பொண்ணு அய்யங்கார்"
ஆரம்பப்பள்ளி.... ஆகா..,
வசந்தம் ஓர்நாள்
வந்துவிட்டு சென்றதோ...?!

ஒன்றாய்த் தான் படித்தோம்
பெண்ணே நீ இன்று
வாழ்வியல் முழுமை
பெற்று நிற்கிறாய்
நான் இன்னும் நகர்தலில்....தான்.

அன்று ஆவணிவீதியில்
வயதுகள் இருபதில்
கிரிகெட் விளையாடும்
ஆனந்தத்தில் நான்
கணவருடன் நீ
கடமை நிறைந்தவளாய்
எங்கள் விளையாட்டை
ஏக்கத்துடன் பார்த்தபடி சென்ற நீ
இன்று வாழ்வியல் கடமை
முடித்து முதுகலை பட்டம்
பெற்றவளாய் மகிழ்வில் நீ
மகளின் மகனுடன் மழலையாய்....!!
Y
நா(ங்கள்)ன் இன்றுதான்
கடமையை கையிலெடுத்து
காலத்தின் பாதையில்...,
அதற்காக உனக்கு முதுமை
வந்துவிட்டதாயோ?
எனக்கின்னும் இளமை
இருப்பதாயோ? அல்ல.
படைப்பின்
வேறுபாட்டைப் பார்
விரைந்து நீ வாழ்வின்
கடமை வெல்கிறாய்...!
வெல்ல நான் இன்று தான்
புறப்படுகிறேன்
உனக்கும் எனக்கும்
வயது நாற்பதுகளில் தான்.
ஆகையினால் பொறாமை
கொள்கிறேனடி தோழி
பெண்ணாய் பிறந்திருக்களாமோ?
என்றெண்ணி. 
Y

No comments:

Post a Comment